1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 20 மே 2017 (12:28 IST)

உடலாலும், மனதாலும் கஷ்டப்பட்டேன்: ராய் லட்சுமி பேட்டி!

ராய் லட்சுமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

 
ஜூலி 2 படத்தால் மற்ற பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது. வழக்கமான கதாபாத்திரங்களளை விட புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.
 
மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் ஒல்லியாக இருப்பதால் அவை கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப  கஷ்டப்பட்டுவிட்டேன். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மீண்டேன். இதனால் படப்பிடிப்பு தாமதமானது என்று கூறினார் ராய் லட்சுமி.