1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (15:00 IST)

''கணவரை பிரிந்து வாழ்வதால் வருந்தவில்லை''- நடிகை ஹேமாமாலினி

hemamalini
இந்தி சினிமாவின் 70, 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி.

இவர்  மாலினி பாண்டவ வனவாசம், மற்றும் இது சத்தியம் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

அதன்பின்னர், ராஜ்கபூரின் ‘சப்னோ சப்னோ கா செளதாகர்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பின் அவர் பிரபல நடிகையானார்.

பின்னர், தர்மேந்திராவுடன் ‘ஹசீன் ஜெயின் ஜவான்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்தார் ஹேமா மாலினி, அதன்பின்னர், 1980ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தர்மேந்திராவுக்கு, பர்காஷ் கவுர் என்பவருடன்  ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர்.

தன் முதல் மனைவியை விவாகர்த்து செய்யாமலேயே ஹேமாமாலினியை 2 வதாக திருமணம் செய்து கொண்டார் தர்மேந்திரா.

இந்த நிலையில், தற்போது தர்மேந்திராவை பிரிந்து ஹேமாமாலினி வாழ்ந்து வருகிறார். தர்மேந்திரா தன் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

‘’வாழ்க்கை என்பது நாம் நினைப்பதுபோல் இருக்காது,. நான் கணவர் தர்மேந்திராவுடன் இணைந்து வாழவில்லை என்று வருந்தவில்லை. என் மகள்களை நன்றாக வளர்த்துள்ளேன். அவர்களுக்கு திருமணமும் நடத்தி வைத்தேன். அவர் எப்போதும் மகள்களுக்குத் தந்தைதான்’’ என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.