ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (15:55 IST)

வணங்காமுடி எனக்கு வேணாங்க சாமி

அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்திலிருந்து திடீரென்று விலகியுள்ளார் டேனியல் பாலாஜி.

 
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குமுன் செல்வா இயக்கத்தில் புதையல் என்ற படத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படம் ப்ளாப்.  எனினும் அரவிந்த்சாமிக்கு அந்தப் படம் மீது ஒரு காதல். அனைவரும் அவரை ஒரே மாதிரி சாக்லெட் பாயாக காட்டிய நேரம்,  புதையல் படத்தில் அரவிந்த்சாமியை காமெடி செய்ய வைத்திருந்தார் செல்வா.
 
புதையல் காதல் இன்னும் தொடர்கிறது. மீண்டும் நடிப்பில் பிஸியான அரவிந்த்சாமி செல்வாவை அழைத்து கால்ஷீட்  தந்துள்ளார். செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடியின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக  தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென்று டேனியல் பாலாஜி வணங்காமுடியிலிருந்து விலகியுள்ளார்.
 
உதயநிதியின் இப்படை வெல்லும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் வணங்காமுடியில் நடிக்க முடியாதநிலை  ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விலகினார் எனவும் கூறப்படுகிறது.