செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (08:03 IST)

ஓடிடியில் சாதனை படைத்த ஹிப் ஹாப் ஆதியின் வீரன்..!

சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ஆதி, மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவன் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

காமெடி பேண்டசி திரைப்படமான இந்த திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஜூன் 30 ஆம் தேதி முதல் வீரன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது.

இந்நிலையில் வெளியானதில் இருந்து ப்ரைம் வீடியோவில் வீரன் திரைப்படம் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.