வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:04 IST)

சிம்டங்காரன் பாடலை பாடி அசத்திய ஹர்பஜன் சிங் ! - வைரல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு  வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சர்கார்’.
 
 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, ராதா ரவி, பழ. கருப்பையா என பல பிரபலங்கள் தளபதி விஜயுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், இந்திய கிரிக்கெட் வீரரான பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.
 
அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில், ஹர்பஜன் சிங் "வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து"  என்று பதிவிட்டிருக்கிறார்.   
 
தமிழ் சினிமா உலகினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்த இப்பாடலை 
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கான ஸ்டைலில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே குதூகலத்தை உருவாகியுள்ளது.
 
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஹர்பஜன் விக்கெட் வீழ்த்தி வெற்றிபெற்றால் நிச்சயமாக களத்திலேயே  சிம்டங்காரன் ஸ்டெப்பில் ஒரு டான்ஸ் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.