செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:29 IST)

ஹன்சிகாவின் அடுத்த படம் தொடக்கம்: டைட்டில் அறிவிப்பு!

ஹன்சிகாவின் அடுத்த படம் தொடக்கம்: டைட்டில் அறிவிப்பு!
ஹன்சிகா நடித்த 50-வது திரைப்படமான மஹா விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ’மை நேம் இஸ் ஸ்ருதி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் ஓம்கார் என்பவர் இயக்க இருப்பதாகவும் மார்க் ராபின் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.