வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (07:03 IST)

வாலு இயக்குனர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் கார்டியன்… திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் கார்டியன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். குரு சரவணன் மற்றும் சபரி ஆகிய இருவர் இந்த படத்தை இணைந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹன்சிகாவின் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு  கிடைக்காத நிலையில் இந்த படமாவது வெற்றிப் படமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.