விவசாயிகளுக்காக ஜி.வி.பிரகாஷின் அம்மண பாடல்
கோலிவுட் திரையுலகில் ஜி.வி.பிரகாஷ் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. ஆனால் அவர் அதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் எந்த வித தகுதியும் இல்லாமல ஹீரோவாக நடித்து வருகிறார். அவரை வைத்து படமெடுக்கும் கோடீஸ்வர தயாரிப்பாளர்கள் லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளாராம். இந்த பாடலை ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகன் எழுதியுள்ளார். 'அம்மண அம்மண தேசத்துல' என்று தொடங்கும் இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த பாடல் 'கொளை விளையும் நிலம்' என்ற டாக்குமெண்ட் படத்தில் இடம்பெற போவதாகவும், இந்த படம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு சமர்ப்பணம் செய்யவுள்ளதாகவும் இப்படத்தை இயக்கியுள்ள க.ராஜீவ்காந்தி கூறியுள்ளார்.