1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (17:35 IST)

ஜிவி பிரகாஷின் புதிய படம்: ஹாட்ஸ்டாரில் நேரடி ரிலீஸ்!

gv prakash
ஜிவி பிரகாஷின் புதிய படம்: ஹாட்ஸ்டாரில் நேரடி ரிலீஸ்!
ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் உதய் மகேஷ் என்பவர் இயக்கும் திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.  இந்த படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் டேனியல் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் பூஜை இன்று நடத்தப்பட்ட நிலையில் இந்த படத்தை ஒரே ஷெட்யூலில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்து வருகிறது
 
Edited by Siva