திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:05 IST)

கூகுள் குட்டப்பா டீசர் ரிலீஸ்!

கேரளாவில் வெற்றி திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் கூகுள் குட்டப்பா என்பது தெரிந்ததே. கேஎஸ் ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பதும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் இடம் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டீசரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த டீசரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
கூகுள் குட்டப்பாவாக வரும் ரோபோ செய்யும் சேட்டை மற்றும் அட்டகாசங்கள் இந்த டீசரில் இருப்பதை அடுத்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது