1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (13:56 IST)

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை

நடிகை காயத்ரி, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

 

 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி. முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர், ‘மெல்லிசை’ என்ற படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம், ‘புரியாத புதிர்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் காயத்ரி.

அறிமுக இயக்குனரான ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில், காயத்ரியும் இணைந்துள்ளார். பழங்குடி மக்களின் தலைவனாக இந்தப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, 8 கேரக்டர்களில் நடிக்கிறார். “கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுவரைக்கும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. இனிமேலும் இப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைக்குமா என்றும் தெரியாது. எனக்கு இந்தப் படத்தில் யாரும் ஜோடி கிடையாது” என்கிறார் காயத்ரி.