வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (16:17 IST)

பிரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்வேன்– கெளதம் கார்த்திக்

பிரியா ஆனந்துடன் காதல் ஏற்பட்டால், அவரைத் திருமணம் செய்து கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார் கெளதம் கார்த்திக்.



கடந்த வாரம் வெளியான ‘ரங்கூன்’ படம்தான், கெளதம் கார்த்திக் இதுவரை நடித்ததிலேயே சுமார் என்று சொல்லத்தக்க ரகம். ஆனால், பாலைவனத்தில் குட்டையைக் கண்டவன் போல அதற்கே அவ்வளவு சந்தோஷப்படுகிறார். அந்த சந்தோஷத்தை, பத்திரிகையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டார்.

‘உங்களுக்கும், பிரியா ஆனந்துக்கும் லவ்வாமே..?’ என்று கொக்கி போட்டனர் பத்திரிகையாளர்கள். “சினிமாவில் நடிப்பதற்கு முன்பே நாங்கள் இருவரும் நண்பர்கள். அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றுவோம்” என்று வழக்கமான பதிலைச் சொல்ல, ‘நட்பு காதலாக மாறினால் பிரியா ஆனந்தைத் திருமணம் செய்து கொள்வீர்களா?’ என்று கிடுக்கிப்பிடி போட்டனர். “அப்படி நடந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால், இப்போது கிடையாது. 35, 40 வயதில் தான் திருமணம் பண்ணிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஆனால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்” என்று பதிலளித்தார் கெளதம் கார்த்திக்.