செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (18:39 IST)

யானை பட பாடலை பாராட்டிய கெளதம் மேனன்

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை பட பாடலை இயக்கு நர் கெளதம் மேனன் பாராட்டியுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் யானை. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் ரிலீஸானது, இதில் தெரிய வருகிறது. , அருண் விஜய் பேசும் -இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும் என்ற  வசனம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஜீவி பிரகாஷின் பின்னணி இசை டீசரில் அசத்தலாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்று இயக்கு நர் கெளதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில், யானை படத்தில் இடம்பெற்றுள்ள #YelammaaYela  என்ற பாடல் அற்புதமாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.  இதற்கு அருண் விஜய் அவருக்கு நன்றி என டுவீட் பதிவிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.