1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 15 ஜனவரி 2020 (10:21 IST)

நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் குவிந்த ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினியின் தர்பார் படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில்  துக்ளக் இதழின் 50 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட ரஜினி பேசிய கருத்து பலரான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
 
இந்நிலையில்,இன்று பொங்கல் திருநாளையொட்டி ரஜினியை சந்திக்க அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.
இதையடுத்து, ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு பொங்கல் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.