சாகஸ் விளையாட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை- வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ஒரு சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் தொடரில் கதா நாயகியாகவும் நடித்து வந்த பிரியா பவானி சங்கர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மேயான மான் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது, தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியுள்ள ஹிட் அடித்துள்ளது.
இந்த நிலையில், தனது காதலருடன் சுவிட்சர்லாந்து சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு ஸ்கை டைவிங் என்ற சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார், இது வைரலாகி வருகிறது.