வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By சினோஜ் கியான்
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (17:02 IST)

’நேருக்கு நேரில் ’ மோதிய விஜய் - சூர்யா : அடுத்து ஜெயிக்கப் போவது யார் ?

தமிழ்நாட்டு மக்களும், சினிமாவையும் இரண்டறக் கலந்து உள்ளனர். அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விந்தைக் கருவி இந்த சினிமா.  ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த  ஹீரோக்களுக்கு பால் அபிஷேபம் செய்வது போலவே ரசிகர் மன்றங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொண்ணூறுகளில் அறிமுகமான தமிழ் சினிமா ஹீரோக்களில் இன்று முன்னணியில்  இருப்பவர்களில் விஜய், சூர்யா இருவரும் மிக முக்கியமானவர்கள்.
 
விஜய், சூர்யா ஆகிய இருவருமே சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கல்லூரித் தோழர்கள். இவர்கள் இருவரையும் வைத்து, மணிரத்னம் தயாரிப்பில், கடந்த  1997 ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் நேருக்கு நேர் என்ற படத்தை இயக்கினார். அது வெற்றிப்படமாக அமைந்தது. 
இவ்விருவரின் சினிமா கேரியரை தூக்கிவிடும் படமாக அது இருக்கவில்லை என்றாலும் விஜய் - சூர்யா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பர். அதன் பிறகு விஜய் சூர்யா இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
அதில், சில படங்கள் சறுக்கினாலும், விஜய்க்கு ஏகப்பட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. ஆனால் சூர்யாவுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக படங்களும், இயக்குநர்களும் அமையவில்லை. அதனால் வெற்றிக்காக காத்திருந்தார். 
 
அந்த சமயத்தில், விஜயின் பிரண்ட் ஸ் படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தது பாலாவின் ’நந்தா’, ’காக்க காக்கா’, ’பிதா மகன்’ போன்ற படங்கள். தன்னை முன்னணி நடிகராக இதில் நிறுத்திக்கொண்டாலும், ஏ.ஆர்,முர்கதாஸின் கஜினி படத்தின் மூலம் முன்னணி ஹீரோவாகி கெத்து காட்டினார்.
அப்படி விஜய்யும் , சூர்யாவும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிக்கவில்லை என்றாலும் , விஜய்யின்  வேலாயுதம் படமும் , சூர்யா - ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவு படமும் ஒரே வருடத்தில்(2011) வெளியானது. இதில் வேலாயுதம் சுமாரான வெற்றியை தக்க வைத்தது. ஆனால் ஏழாம் அறிவு படுதோல்வி படமாக அமைந்தது. 
இதற்கடுத்து , இவர்கள் இருவரது படமும் ஒரே நேரத்தில் வெளிவரவில்லை. தற்போது, விஜய் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றிபெற்று டாப் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அடுத்த கட்ட புரோமோசனான சூப்பர்  ஸ்டார் என்ற ரெஞ்சுக்கு சென்றுவிட்டார்.  இந்த சமயத்தில், சூர்யாவின் அடுத்த படங்கள்  எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தெரிகிறது. ஆனால் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும்  இடையில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் வெற்றிவாகை சூடிய மாதிரி இப்போது அஜித் -விஜய் இருவருக்கும் இடையில் சூர்யா அதே இடத்தில் தான் மாஸ்ஹீரோவாக ஜொலித்துக்கொண்டுள்ளார். அவரை இடத்தை யாராலும் பறிக்க முடியாது. இருப்பினும் அவர் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து உடலை வருத்தி நடிக்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரது மெனக்கெடல்கள் கவனிக்க வைக்கிறது. சமூக அக்கரை யோசிக்க வைக்கிறது.
இந்நிலையில், இயக்குநர்  சுதா .கே. பிரசாத் இயக்கத்தில், சூர்யாவின் ’சூரறைப் போற்று’ என்ற படமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும்  ’விஜய் 64 ’படமும் அடுத்த வருடம் ரிலீசாகும் என்று தெரிகிறது.
நண்பர்களாக இருந்து, ’நேருக்கு நேர் ’என்ற படத்தில் மூலம் எதிரெதிர் துருவங்களாகி மோதிக்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் இரட்டை நாயகர்களாக நடித்து ஜெயித்துள்ள   விஜய் - சூர்யாவின், வேலாயுதம் - ஏழாம் அறிவு ஆகிய படங்கள் வெளியாகி 8 வருடங்களுக்கு பின்னர் அடுத்த வருடம் (2020) இருவரது படங்களும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதில் இவ்விரு நாயகர்களின் படங்களும்  ஜெயிக்க வேண்டும் என்பதுதான் இருவரது ரசிகர்களின் பிராத்தனையாக உள்ளது.