வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (16:08 IST)

படப்பிடிப்பின் போது பிரபல இயக்குனர் செய்யார் ரவி திடீர் மரணம்!

பிரபல  இயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் இயக்கிய முதல் படம் தர்ம சீலன். அரிச்சந்திரா, தர்மயுத்தா  (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் படத்தை சிங்களத்தில் ரீமேக்  செய்து வந்தார். விரைவில் வெளியாக உள்ளது.

 
இவர் 1993ம் ஆண்டு பிரபுவை வைத்து தர்மசீலன் என்ற படத்தையும் 1998ம் ஆண்டு கார்த்திக், மீனாவை வைத்து ஹரிச்சந்திரன்  என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார்.
 
சத்யஜோதி பிலிம்ஸுக்காக அன்னக்கொடியும் 5 பெண்களும் என்ற சீரியலை இயக்கி வந்தார். இன்று இந்த சீரியலின் படப்பிடிப்பு  நடந்து கொண்டிருந்தபோது, செய்யாறு ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்  பிற்பகல் 12 மணிக்கு அவர் காலமானார்.