வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (10:04 IST)

இதுவரை இல்லாத சிவகார்த்திகேயன்… டாக்டர் படத்துக்கு பாஸிட்டிவ் ரிவ்யூஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வித தடங்கல்களுக்குப் பிறகு இன்று அவரின் டாக்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இன்று காலை சிறப்புக் காட்சிகள் ஆங்காங்கே திரையிடப்பட்டன. அதுமட்டுமில்லாமல் சில வெளிநாடுகளிலும் படம் வெளியாகிவிட்டது. இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

அதில் பெரும்பாலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களே வருகின்றன. மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரியரில் நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்த படத்தில்தான் வித்தியாசமாக நடித்துள்ளார் என்றும் பாராட்டுகள் குவிகின்றன. ஆனால் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பவர்கள் பெரும்பாலும் சம்மந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களாகவே இருப்பார்கள் என்பதால் உண்மையான விமர்சனம் தெரியவர மேலும் சில காட்சிகள் திரையிடப்பட்டால்தான் தெரியவரும்.