புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (11:55 IST)

அடடே... இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல - சூர்யா பட பாடல் குறித்து இயக்குனர் பதிவு

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக உள்ள படம் சூரரை போற்று. கொரோனா காரணமாக இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படம் மீது பல சர்ச்சைகள் உள்ள நிலையில், பட பாடலின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் “மண் உருண்ட மேல.. மனுச பய ஆட்டம்” என்ற பாடல் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதாகவும், பொது அமைதியை குலைப்பதாகவும் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சூரரை போற்று பட பாடலுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து அரசியல் வெளியில் சூர்யா கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் அவரது படத்தின் மீதான நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக பலதரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்ப்போது இந்த விவகாரம் குறித்து  இயக்குனர் ஜான் மகேந்திரன்,  " இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல குட் பாய்ஸ்" என்று பதிவிட்டு சூர்யா ரசிகர்ளின் கவனத்தை திசை திரும்பியுள்ளார்.