1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (12:33 IST)

துருவ் விக்ரமின் வர்மா டீசர் புதிய சாதனை

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமின் நடிப்பில் தயாராகி வரும் வர்மா படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
வர்மா டீசரை 24மணி நேரத்தில் 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்ட் ஆக உள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து தெலுங்கில் செம ஹிட்டான அர்ஜுன் ரெட்டி, இயக்குநர் பாலா, தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாடல் மேகா சௌத்ரி ஆகியோர் தமிழில் அறிமுகமாகி உள்ளனர்.
 
அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார். பிக் பாஸ் சீசன்-1 புகழ் ரைஸாவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில்  நடித்து வருகிறார்.