இயற்கை சூழ்ந்த அழகிய இடத்தில் கியூட்டா நடனம் ஆடிய தர்ஷா குப்தா - வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால், அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ருத்திர தாண்டவம் எனும் ஜாதி சர்ச்சை படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டதோடு படவாய்ப்புகளையும் இழந்துவிட்டார்.
இதனிடையே தொடர்ந்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தர்ஷா குப்தா எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆனால், கவர்ச்சியை கண்ணுக்கு காட்டாமல் செம கியூட்டான உடையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் மகிழ்ச்சியாக வெளியிட்ட வீடியோ லைக்ஸ் அள்ளியுள்ளது.