‘மாஸ்டர்’ படத்தை தயவு செய்து தியேட்டரில் பாருங்கள்: தனுஷ்
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் முதல்கட்டமாக இந்த படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் குறித்து தனது டுவிட்டரில் நடிகர் தனுஷ் கூறியிருப்பதாவது: விஜய் அவர்களின் மாஸ்டர் ஜனவரி 13 அன்று வெளியாவது சினிமா பிரியர்களுக்கு ஒரு சிறந்த செய்தி ஆகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் பாருங்கள் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்