1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (20:53 IST)

தனுஷுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா..மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்

rayan-dhanush-sj surya
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில், இவரது 50வது படத்தை இவரே இயக்கி நடிக்கிறார். இதுகுறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19 ஆம் தேதி வெளியானது.
 
டி50 எனக் குறிப்பிடப்பட்ட இப்படத்திற்கு ராயன் என்று பெயரிட்டுள்ளனர். சன்பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
 
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும்  நிலையில்,  நேற்று இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியானது. இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
 
ஏற்கனவே சந்தீப் கிஸன், காளிதாஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
sj surya
ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட்டுள்ளது சன்பிக்சர்ஸ். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.