தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி பட நடிகை.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மாறன். இப்படத்தை அடுத்து,தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள்ல் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படங்களை அடுத்து அவர் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர், இப்படத்தை, ராக்கி, சாணிக்காகிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இவர் உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது.