அஜித் படத்திற்கு அடுத்த வாரம் தனுஷ் படம்
கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் வெளிவந்த ஒரே வார இடைவெளியில் தனுஷ் நடித்த 'அனேகன்' வெளிவந்தது. இதைபோலவே அஜித் நடித்த விவேகம் படம் ரிலீஸ் ஆகும் அடுத்த வாரம் தனுஷ் நடித்த 'விஐபி 2' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அஜித்தின் விவேகம் வரும் ஜூலை மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தனுஷின் 'விஐபி 2' படத்தை ஜூலை 28ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் விஐபி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், இந்த படத்தின் டீசர் வரும் மே மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்