மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழத்தில் அறியப்படும் ஆளுமைகளான இளையராஜா மற்றும் பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் ஆகியோரின் பயோபிக்குகளும் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை.
இந்நிலையில் இப்போது நடிகர் தனுஷ் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக சந்திரபாபுவின் உறவினர்களிடம் பேசி முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.