திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (22:53 IST)

தனுஷ் பட நடிகை கொரொனாவில் இருந்து நலம் !

தனுஷ் பட  நடிகை கொரொனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் , கவனக்குறைவாக இருந்ததால் தனக்கு கொரொனா வந்துள்ளதாக நடிகர் சென்ராயன் தெரிவித்து தனது ரசிகர்களை எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், தனுஷ் பட  நடிகை கொரொனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன், தனுஷுடன் அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இவருக்கு கடந்த மே 3 ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன்.

கடவுளுக்கும் எல்லோருடைய பிரார்த்தனைக்கும் எனது நன்றி….கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடம் முகககவசம் அணிந்துசெல்லவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த டுவீட் வைரலாகிவருகிறது.