1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (09:16 IST)

10 ஆண்டுகளில் நான்கு அறுவை சிகிச்சைகள்... விஜய் டி வி புகழ் டிடியின் சமீபத்தைய பதிவு!

விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக அறியப்பட்டது விஜய் டிவியின் காபி வித் டிடி மூலமாகதான். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் முறிந்து போனது.

இதற்கிடையில் அவர் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். பொது மேடைகளில் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இது சம்மந்தமாக தற்போது அவர் நான்காவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் “கடந்த மூன்று மாதங்கள் எனக்குக் கடினமான காலங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். கடந்த 10 வருடத்தில் இது என்னுடைய நான்காவது அறுவை சிகிச்சை.இதுவே என்னுடைய கடைசி அறுவை சிகிச்சையாக இருக்கும் என நம்புகிறேன். அறுவை சிகிச்சை நடந்து 2 மாதங்களுக்கு பிறகு நான் இந்த பதிவை என்னுடைய நலம் விரும்பிகளுக்காக பதிவு செய்கிறேன். எனக்காக இத்தனை ஆண்டுகள் பிராத்தனை செய்தவர்களுக்கு நான் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.