வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (18:16 IST)

32 வினாடியில் 12 வினாடிதான் வீடியோவா? ‘தர்பார்’ ரசிகர்கள் அதிருப்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படம் வரும் 9-ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில் சற்று முன்னர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ படத்தின் 32 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் வெறும் 12 வினாடிகள் மட்டுமே காட்சிகளும், மீதி உள்ள 20 வினாடிகள் டைட்டில் போஸ்டரும் இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் அந்த 12 வினாடிகளில் ரஜினிகாந்தின் காமெடி நடிப்பும், ரஜினியை கலாய்க்கும் நயன்தாராவின் கலாய்ப்பு நடிப்பும் அட்டகாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து உற்சாகமாகியுள்ளனர்.
 
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.