லீக்கானது "தர்பார்" ஷூட்டிங் வீடியோ! வைரலாகும் ரஜினியின் ஸ்டைல்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் துணை நடிகர்களை எச்சரிக்கும் விதமாக மொபைல் போன்களை படப்பிடிப்பு தளத்திற்குள் கொண்டுசெல்ல தடைவிதித்து மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்திவந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் சிறு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரஜினியின் வாக்கிங் ஸ்டைல் எப்போதும் போலவே ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.