ரூ.125 கோடி வசூல் டுவீட்டை டெலிட் செய்த டி.இமான்
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் நிறுவனம் ஒரு டுவீட்டை இரவோடு இரவாக பதிவு செய்தது. மறுநாள் காலை சமூக வலைத்தளங்கள் இந்த ஒரே ஒரு டுவீட்டால் பெரும் பரபரப்பில் இருந்தது.
ரூ.125 கோடி வசூலை டுவீட் மூலம் குறிப்பிட்ட இந்த நிறுவனம், ரூ.100 கோடி வசூல் செய்தபோது ஏன் தெரிவிக்கவில்லை என்பதே பலருடைய கேள்வியாக இருந்தது. 100 என்பது மிக முக்கியமான நம்பர். கிரிக்கெட்டில் யாராவது 100 அடித்தபோது பேட்டை தூக்காமல் 125 அடித்தபின் பேட்டை தூக்குவார்களா? என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் ரூ.125 கோடி வசூல் டுவிட்டை முதலில் ரீடுவீட் செய்த 'விஸ்வாசம்' இசையமைப்பாளர் டி.இமான், பின்னர் அதன் நம்பகத்தன்மையை அறிந்து அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் அந்த பெருமையை குலைக்கும் வகையில் அந்நிறுவனத்தின் டுவீட் பதிவு செய்யப்பட்டதாக பெரும்பாலான நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.