திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papikhsa
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (16:33 IST)

போகாத ஊரே இல்ல... நான் பொறந்தேன் பத்தூர் காலி.. வளர்ந்தேன் ஜில்லாவே காலி - வைரலாகும் கொரோனா பாடல்!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 724ஆக உயர்ந்துள்ளது . இதனை கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சித்தும் இதுவரை எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடையாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்த நோய் வரும் முன்னே தங்களை தாங்கள் காத்துக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றனர் .

இந்நிலையில் சிலர் இதனை மீம்ஸ் போட்டு சமூகலைத்தளங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் அஜித்தின் பரமசிவம் படத்தில் இடம்பெற்ற  "ஆசை தோசை" என்ற பாடலில் இடம்பெறும் போகாத ஊரே இல்ல...நான் பொறந்தேன் பத்தூர் காலி.. வளர்ந்தேன் ஜில்லாவே காலி என்ற பாடல் வரிகள் கொரோனாவிற்கு பொருத்தமாக இருப்பதால் அனைவரும் அதை இணையத்தில் தேடி பிடித்து பார்த்து வருகின்றனர்.