ஃபேமஸ் ஆனதும் ப்ரண்ட்டை கட் பண்ணிய குக் வித் கோமாளி பிரபலம்!
குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் இப்போது வரிசையாக திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் அஸ்வின் மட்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளாராம்.
ஆனால் இதற்கு முன்னரே அஸ்வின் தனது நண்பர் அருண் கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் இந்த நிலை மாறும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம். ஆனால் இப்போது தான் பிரபலம் ஆனதால் எங்கேயும் தனது முதல் படத்தைப் பற்றி பேசுவதில்லையாம்.