ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (13:24 IST)

காந்தியை அவமதித்து விட்டனர் - சுட்டுப்பிடிக்க உத்தரவு போஸ்டரால் வந்த சர்ச்சை !

மிஷ்கின் மற்றும் விக்ராந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் போஸ்டரில் காந்தியை அவமானப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது. ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய இந்தப்படத்தின் போஸ்டரால் புதிதாக ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் போஸ்டரில் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளோடு காந்தியின் படமும் இடம்பெற்றிருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மிகவும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த இந்தப்படத்தில் காந்தியின் படத்தைப் பயன்படுத்தி அவரை அவமானப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் இன்று வேலூரில் உள்ள திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.