1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 15 மே 2017 (14:56 IST)

அஜித்துடன் நடிக்க வேண்டும்: ஆசைப்படும் ‘தேனடை’ மதுமிதா

காமெடி வேடத்தில் கலக்கிவரும் ‘தேனடை’ மதுமிதாவுக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்.


 
 
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் மதுமிதா. அந்தப் படத்தில் அவர் நடித்த கேரக்டரால், ‘தேனடை’, ‘ஜாங்கிரி’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். சூரி ஜோடியாக இவர் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ கடந்த வாரம் ரிலீஸாகியுள்ளது.
 
விஜய்யுடன் ‘ஜில்லா’, ‘புலி’ படங்களில் நடித்துள்ள மதுமிதாவுக்கு, அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசையாம். “அஜித் சாரைப் பற்றி இதுவரைக்கும் ஒருவர் கூட தவறாகச் சொன்னதில்லை. எல்லோருமே அவருடைய நல்ல குணத்தைப் புகழ்கின்றனர். அதற்காகவாவது ஒரு படத்தில் அவருடன் நடித்துவிட வேண்டும். என் வாழ்நாள் ஆசையே அது தான்” என்கிறார் மதுமிதா.