திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2017 (10:11 IST)

தனுஷ் கஜோல் மோதல்? விஐபி 2-விற்கு சிக்கல்!!

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்   உருவாகியுள்ள படம் 'விஐபி 2'. இந்த படத்தில் அமலாபால் நாயகியாகவும் கஜோல் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.


 
 
இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் இன்று நடைபெருகிறது. 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை கஜோல் இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் கஜோல் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த படத்தின் ஹிந்தி பதிப்பிற்காக டப்பிங் பேச கஜோல் தனியாக சம்பளம் கேட்டதாகவும், அதனால் தனுஷுக்கும் அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.