செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (09:06 IST)

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் "சிட்டாடல் ஹனி பன்னி"படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை   பொழுது போக்குத் தளமான பிரைம் வீடியோ,  வெளியிட்டது.
 
வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன.
 
சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது.