செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (06:52 IST)

சத்யராஜ்-பாகுபலி பிரச்சனைக்கு பதிலடி கொடுத்த தமிழகம். அதிர்ச்சியில் கர்நாடகா

சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் போராடி வரும் நிலையில் நேற்று சத்யராஜ், ஒன்பது வருடங்களுக்கு தான் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.



 


சத்யராஜ் வருத்தம் தெரிவித்தபோதிலும் தொடர்ந்து கர்நாடாவில் அவருக்கு எதிரான போராட்டங்களும், உருவ பொம்மை எதிர்ப்பு சம்பவங்களும் நடந்து வருவதால் 'பாகுபலி 2' அம்மாநிலத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் முடிந்தபாடில்லை

இந்நிலையில் கன்னட அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் கன்னட படங்களின் படபிடிப்புகள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மாயாஜால் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த கன்னட திரைப்படம் ஷரத்தி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலை முன்பதிவு செய்தவர்களுக்கு மாயாஜால் திரையரங்க நிர்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை சென்னையில் கன்னட படங்கள் திரையிடப்படாது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் இந்த அதிரடியால் கர்நாடக அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.