திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (13:31 IST)

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது!

சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இத்தனை ஆண்டுகள் இயங்கி வந்த உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தியேட்டர் உள்ள இடத்தை பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தியேட்டரை இடித்துவிட்டு அங்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றைக் கட்ட உள்ளதாக சொல்லப்பட்டது. முன்பே சிலமுறை இந்த தியேட்டர் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியானது. அப்போது ரசிகர்கள் அந்த தியேட்டரில் தாங்கள் பார்த்த படங்களைப் பற்றி பகிர்ந்து நினைவேக்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தற்போது திரையரங்க வளாகம் மூடப்பட்டு தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு சோகமான செய்தியாக அமைந்துள்ளது.