வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (18:39 IST)

"அப்பாவின் படம் ரிலீசாக காரணமே கேப்டன் தான்''- நடிகர் சிபிராஜ்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.
 

அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும்  இரங்கல் கூறினர்.

டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின்  பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்ப்பட்டது.

இந்த நிலையில், இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சத்யராஜ்  நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘’கேப்டன் விஜயகாந்த் சாருடைய இறப்பு அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு மட்டுமல்ல  எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்புதான்.
 
vijayakanth

விஜயகாந்த் சார் ரொம்ப தைரியமான மனிதர். பாசமாக இருப்பார். அப்பாவின் (சத்யராஜ்) வள்ளல் என்ற படம் ரிலீஸின்போது, பெரிய பிரச்சனை. இப்பிரச்சனையின்போது அப்பாவுடன் கூட இருந்து இப்படம் ரிலீஸாக காரணமாக இருந்தவர் அவர்.

நான் சினிமாவில் நடித்தபோது என்னை அழைத்து அட்வைஸ் செய்தார்.  நிறைய இம்ப்ரூஸ் பண்ண வேண்டுமென கூறினார். மனதில் பட்டதை நேரில் கூறியவர். அவரது இந்த  நேரத்தில் அவரது மறைவுக்கு அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார்.