திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (09:51 IST)

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் காலமானார்! – தொடர் இழப்பை சந்திக்கும் பாலிவுட்

நேற்று பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இறந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ரிஷி கபூர் காலமானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் தான் உடைந்து போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் பிரபல நடிகர்கள் இறந்துள்ள சம்பவம் பாலிவுட் சினிமாவை மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.