அபிமன்யூ... கார்த்தியுடன் மோதப் போகும் இந்தி வில்லன்
சதுரங்க வேட்டை வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக அபிமன்யூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அனுராக் காஷ்யபின் குலால், ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர் அபிமன்யூ. குலால் படத்தில் இவர்தான் மைய கதாபாத்திரம், கிளாஸ் நடிப்பு.
தமிழில் இவரை நாயகனிடம் அடிவாங்கும் மெயின் வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். அஜித், விஜய்யிடம் தாராளமாக உதை வாங்கியவர் அடுத்து கார்த்தியிடம் அடிவாங்க காத்திருக்கிறார். ஆம், வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இவர்தான் வில்லன்.
இந்தப் படத்தில் கார்த்தி போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.