திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:25 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் இணையும் ஓவியா மற்றும் பரணி - திடீர் திருப்பம்?

பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பப்பட்டவர் ஓவியா. இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் நன்றாக இல்லை என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 
ரணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிறகு தனிமைபடுத்தப்பட்டதன் காரணமாக, மனவேதனை அடைந்து பிக்பாஸ்  வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து பின் அந்த தொலைக்காட்சியே அவரை வெளியே அனுப்பி வைத்தது. வெளியே வந்த பரணிக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம்
 
ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் ஓவியா மற்றும் பரணி ஒயில்ட் கார்டு (Wild Card) மூலம்  நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக செய்திகள் வருகின்றன. நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவது எல்லாமே ஓவியா கையில்  தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.