விதிகளை மாற்றி அமைத்த பிக் பாஸ்: ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி!!
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள முமைத் கானுக்கு பிக் பாஸ் போட்டி விதிமுறைகளை மீறி ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் இன்று சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டி இருந்தது. இது தொடர்பான நோட்டிஸ் அவருக்கு வழ்ங்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் போட்டியாளர்களின் வெளியுலக தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்படும். ஆனால், முமைத் கானுக்காக பிக் பாஸ் தனது விதிகளை மாற்றி அமைத்துள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று பிக் பாஸ் வீட்டை விடு வெளியே அனுப்பப்பட்டார். விசாரணை முடிந்த பின்னர் மீண்டும் அவர் வீட்டிற்கு வருவார் என தெரிகிறது.