வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (11:14 IST)

பிக்பாஸ் காயத்ரி யாருக்கு ஐ லவ் யூ சொன்னார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் காயத்ரி ரகுராம். இவர் திரைப்படங்களில் நடன இயக்குநராகவும் உள்ளார். 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காயத்ரி தொடர்ந்து தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் தன்னை 3 லட்சம் பேர் பின்தொடர்வதை பார்த்த அவர் மகிழ்ச்சியில்  ட்வீட் செய்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு காயத்ரி ரகுராம் பாஜக மற்றும் படங்கள் பற்றி ட்வீட்டி வந்தார்.  ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் என்ன ட்வீட்டினாலும் அதை பார்க்க பலர் வருகிறார்கள். இந்த காரணத்தால் ட்விட்டரில் காயத்ரியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டதை பார்த்த மகிழ்ச்சியில் காயத்ரி, உடனே ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுப்பது போன்று ஒரு ஜிப் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்க ரொம்ப நல்லவங்களா மாறிட்டீங்க என்றும், மேலும் ஒருவர் வாழ்த்துகளையும், மற்றொருவர் புள்ளைக்கு தாங்கல ஓட்டுவதற்குதான் ஃபாலோ பண்றாங்கன்னு கூடத் தெரில என்று ட்வீட் செய்துள்ளனர்.