வாட் நான்சன்ஸ்... ப்ரோமோல தலைவனை டெரெர்ரா காட்டிட்டு அப்பறோம் மொக்க பண்றீங்க!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமே இல்லாமல் மொக்கையா இருக்கு என மக்கள் சலிப்படைந்துவிட்டனர். என்ன தான் இருந்தாலும் பர்ஸ்ட் சீசன் மாதிரி வராத்துப்பா என பேச ஆரம்பித்து விட்டனர்.
இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே சண்டை , வாக்குவாதம் , ப்ரோமோ என எல்லாவற்றிலும் முதல் ஆளாக முன்னிருப்பது சுரேஷ் சக்கரவர்த்தி. முதலில் அவரை பற்றி தப்பாக புரிந்துகொண்ட பல பேர் பின்னர் அவரது நடவடிக்கைகளை பார்த்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், "கடந்து வந்த பாதை" டாஸ்கின் இரண்டாவது கட்டத்தில் யாருடைய கடந்த காலம் பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லையோ அவர் இந்த வீட்டில் தகுதி இல்லாத பட்டியலில் இடம்பெறுவர்.
இதில், ஆஜித் , ரம்யா பாண்டியன் , ஷிவானி , சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். வழக்கம் போலவே இந்த ப்ரோமோவில் சுரேஷ், " என்னயுடையது 100% ரைட்" என கூறியபடி கோபமாக நடந்து வருகிறார். தலைவனை ப்ரோமோல மட்டும் டெரர் காட்டுறீங்க.. இத நம்பி சம்பவம் இருக்கு வந்த பார்த்தால் எபிசோட் படுமொக்கையா இருக்கு.. போங்கய்யா நீங்களும் உங்க கதையும்..