1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (10:14 IST)

ஷிவானிக்கு ஸ்கெட்ச் போட்ட ஹவுஸ்மேட்ஸ் - பாலாவுக்கு கேம் ஓவர்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று சம்யுக்தா வெளியேறினார். அதையடுத்து இன்று நாமினேஷன் ஆரம்பித்துள்ளது.  இதில் சனம் ஷெட்டி , ஆரி , ஷிவானி உள்ளிட்டோர் அதிகம் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். ஆரி வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வந்தாலும் வாரம்  வாரம் அவர்களின் ஓட்டுக்களை அதிகம் பெற்று வருகிறார். 
 
இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஆரி தான் டைட்டில் வின்னர் அடிப்பார் என யூக்கியப்படுகிறது. இந்நிலையில் இன்று ஷிவானி பக்கம் ஆடியன்ஸ் வெறுப்பை காட்டி வருகின்றனர் அடுத்ததாக ஷிவானி தான் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என கூறி வருகின்றனர். 
 
காரணம் பிக்பாஸ் வீட்டில் பாலாவின் பின்னால் சுற்றித்திரிவதை தவிர ஷிவானிக்கு வேற வேலையே இல்லை. அர்ச்சனா கூறுவது போலவே பாலாவின் நிழலிலும் ஷிவானி தான் இருக்கிறார் . ஆனால், ஷிவானியை வெளியேற்றிவிட்டால் பாலாவுக்கு கன்டென்ட் குறைந்துவிடும். இப்போதைக்கு பாலா தான் பிக்பாஸ் சொத்து என்பதால் பாலாவுக்காகவாவது ஷிவானி வீட்டிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்.