வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (14:40 IST)

பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் - லீக்கான வீடியோ!

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் லீக்காகியுள்ளது. 


 
அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு சலுகையை அறிவிக்கிறார். அதாவது, உங்களில் ஒருவர் மட்டும் தான் இந்த போட்டியில் வெற்றிபெற்று ரூ.50லட்சத்தை பெற முடியும்.. இதனிடையில் தற்போது இந்த ரூ.5 லட்சத்தாய் எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று பிக்பாஸ் சொல்லி முடித்தவுடன் கவின் அதை எடுக்க செல்கிறார். எனவே, கவின் அந்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினாரா இல்லையா என்பதை இன்று பொறுத்திருந்து இன்றைய எபிசோடில் பார்க்க வேண்டும்.
 
இதுவரை கடந்த 2 சீசன்களில் இந்த சலுகையை அறிவித்தபோது அதை யாரும் எடுக்கவில்லை. ஆனால் கவின் முதல் ஆளாக தற்போது முன்வந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.