பிக்பாஸ் வீட்டின் முதல் நபரான "பாத்திமா பாபு " முதலில் வெளியேற்றம் ?

Last Updated: ஞாயிறு, 7 ஜூலை 2019 (11:11 IST)
பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக வெளியேறப்போது என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அது பாத்திமா பாபு தான் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதில் கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து கடந்த 23ம் தேதி மூன்றாவது சீசன் கமல் ஹாசனால் துவங்கப்பட்டது. 


 
மொத்தம் 16 கலந்துகொண்ட இந்த சீசனும் ஓரளவிற்கு விறுவிறுப்பாகத்தான் சென்று கொண்டிருக்க தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரையும் மற்ற போட்டியாளர்கள் டார்க்கெட் செய்யப்பட்டு வந்தனர். ஆனால் மதுமிதா மக்களின் பேராதரவை பெற்று 10 கோடிக்கும் மேல ஓட்டுக்களை பெற்று எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். 
 
எனவே அடுத்தது மீராமீதுன் வெளியேறுவார் என சூழ்நிலை இருந்த பட்சத்தில் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆம் இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பாத்திமா பாபு முதலாவது ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என நல்லவராக இருக்கும் பாத்திமா பாபுவால் கன்டென்ட் இல்லை. அவர் நல்லவராக நடந்து கொள்வதால் டிஆர்பியும் ஏறப்போவதில்லை, இதனை சுதாரித்துக்கொண்ட விஜய் தொலைக்காட்சி முதலாவதாக பாத்திமா பாபுவை வெளியேற்றியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :