ஓவியா இல்லாத பிக்பாஸ் எடுபடுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிவிட்டதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதைக்கூட டிஆர்பியை மனதில் வைத்து விஜய்டிவி அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த அளவுக்கு தமிழக மக்களை பாதிக்கும் ஒரு ஷோ நடந்ததில்லை என்றே கூறலாம். இதை ஒரு ஷோவாக பார்க்காமல் ஓவியாவுக்காகவே கிட்டத்தட்ட அனைவரும் பார்த்தனர்.
இந்த நிலையில் ஓவியா வெளியேற்றப்பட்டதாக தெரிந்ததும் விஜய் டிவியையும், கமல்ஹாசனையும், அந்த வீட்டில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களையும் ஓவியா ஆர்மியினர் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
ஓவியாவுக்கு கிடைத்த புகழால் பொறாமை அடைந்த அந்த டிவி பிளான் பண்ணி, பிந்துவை வரவழைத்து ஓவியாவை வெளியேற்றிவிட்டது. ஆனால் ஓவியாவின் இடத்தில் யாரை வைத்தாலும் இந்த நிகழ்ச்சி எடுபடாது என்பதை இனி அவர்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இப்போதே பலர் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.